History of Eiffel Tower பொது அறிவு செய்திகள்
வல்லநாடுகளில் ஒன்று ஸீன் நதிக்கரை யில் அமைந்துள்ளது. உலகின் பிரதானமான வணிகம் மற்றும் பண்பாட்டு நிலையமாகத் திகழ் கிறது, பாரீஸ். சுமார் 55 லட்சம் பேர் ஆண்டுதோறும் இங்கு சுற்றுலா வருகிறார்கள்.
பாரீஸின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு, ஈபிள் டவர். 1889-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சியின் நூற் றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த உலகக் கண்காட்சிக்காக, நுழைவாயில் வளைவாக அமைக்கப்பட்டதுதான் இந்த ஈபிள் கோபுரம். கஸ்டாவ் ஈபிள் மற்றும் ஷேய் ஆகியோர் அரசுடன் செய்து கொண்ட கட்டுமான ஒப்பந்தத் தின்படி, மெனரிஸ் கோச்லின் மற்றும் எமில் நோகைர் என்ற இரண்டு பொறியாளர்கள் இதனைக் கட்டினர்.
இதன் முதன்மை வடிவமைப் பாளர் ஸ்டீபன் சாவெஸ்டர். 2 ஆண்டுகள், 2 மாதங்கள், 5 நாட்கள் என்று குறுகிய காலத்தில் 300 பணியாளர்களின் உழைப்பில் உருவான அதிசயம் இது. மார்ச் 31, 1889-ல் கட்டி முடிக்கப் பட்டு இதன் உச்சியில் பிரெஞ்சுக் கொடி பறக்க விடப்பட்டது. இதன் எடை 10ஆயிரத்து100 டன்.
இதில் பெயிண்ட் மட்டுமே 40 டன்கள் ! இதில் 7ஆயிரத்து 300 டன் எடையுள்ள 18ஆயிரத்து38 எக்குத் துண்டுகள் மற்றும் 25 லட்சம் நட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் உயரம் 324 மீட்டர், உச்சியை அடைய 1665 படிகள் ஏற வேண்டும்.
Kidhours – History of Eiffel Tower
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.