டிஜிட்டல் உலகில் பயனாளர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள கூகுள் புதிய பேப்பர் போனை அறிமுகம் செய்துள்ளது. ஒரு சின்ன துண்டுப் பேப்பர் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் பேப்பர் போனில் க்ரெடிட் வைத்துக் கொள்ள இருப்பிடம் உள்ளது.
மற்றபடி டிஜிட்டல் உலகில் இருந்து பயனாளரை விலக்கிவைக்க மட்டுமே இப்போன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் detox என்றால் ஒருநாள் முழுவதும் எந்தவொரு மொபைல் போன் பயன்பாடும் இல்லாமல் இருப்பது. இந்த பேப்பர் போனைப் பயன்படுத்த உங்களது போனில் உள்ள ஆப் ஒன்றை செயல்படுத்த வேண்டும்.
அந்த பேப்பர் போன் ஆப் மூலம் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியத் தகவல்களைத் தேர்ந்தெடுத்து பேப்பர் போனில் பிரிண்ட் செய்துகொள்ளலாம். இதன் மூலம் அவசரத் தேவைக்கான போன் எண்கள், குறிப்புகள் என சிலவற்றை மட்டும் நீங்கள் பேப்பர் போனில் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளலாம். பிரிண்ட் செய்ய ஆப் உதவும்.
இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றி வாரம் ஒருநாளாவது பயனாளர்கள் டிஜிட்டல் டீடாக்ஸ் செய்துகொள்வார்கள் என கூகுள் நம்புகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பு கிடைக்கிறதாம்.