Thirukkural 502 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / தெரிந்து தெளிதல்
”குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.”
நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
—மு. வரதராசன்
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
—சாலமன் பாப்பையா
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 502
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.