Thursday, November 21, 2024
Homeசிந்தனைகள்பொதுவான சிந்தனைகள்நச்சு செடியிலிருந்து மருந்து Medicine from Poisonous Plant

நச்சு செடியிலிருந்து மருந்து Medicine from Poisonous Plant

- Advertisement -

Medicine from Poisonous Plant  சிறுவர் சிந்தனைகள்

- Advertisement -

நம் உடலில், ‘லெப்டின்’ எனும் ஒரு ஹோர்மோன் இருக்கி றது.இது, நம் உடலுக்கு உணவு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், உணவு உண்ட பின் அது போதுமா என்பது பற்றியும் மூளைக்கு தகவலை அனுப்பும்.

சிலர் உடலில் இந்த ஹோர்மோன் சரியாக வேலை செய்யாததால், உடலுக்கு தேவையான அளவு உணவு சாப் பிட்ட பின்னரும் உணவு உண்ட திருப்தி ஏற்படாது. இதனால், அதி கமான உணவை உட்கொண்டு உடல் எடை அதிகரிக்க நேரிடும்.

- Advertisement -

இந்த ஹோர்மோனை தூண்டக் கூடிய ஆற்றல், ‘செலஸ்ட்ரோல் என்ற வேதிப் பொருளுக்கு உண்டு. இதை எலிகளில் சோதித்து பார்த்தபோது, அவற் றின் உடல் எடையை கட்டுப் படுத்த முடிந்தது. அதேபோல மனிதர்களிலும் இது வெற்றியை தந்திருக்கிறது. ஆனால், இதை செயற்கையாக ஆய்வுக்கூடங்களில் உருவாக்குவது அவ்வளவு சுலபமானது அல்ல.

- Advertisement -

இதற்குத்தான் இயற்கையாக இது கிடைக்கக்கூடிய தாவரங்களை ஆய்வாளர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் சீனாவில் பல 100 ஆண்டுகளாக மருத்துவத் திற்கு பயன்படும், ‘தண்டர் கோட் வைன்’ என்ற ஒரு செடியில் இயற்கையாகவே இந்த வேதிப் பொருள் இருப்பதை கண்ட றிந்துள்ளனர்.

Medicine from Poisonous Plant  சிறுவர் சிந்தனைகள்
Medicine from Poisonous Plant  சிறுவர் சிந்தனைகள்

இந்தச் செடியில் ஏராள மான நச்சுத்தன்மை இருப்பதால், நாக்கு தேவையான மருந்தான இந்த வேதிப் பொருளை மட்டும் அதிலிருந்து பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால், ‘ஈஸ்ட்’ எனப்படும் பூஞ்சையை வைத்து சுலபமாக பிரித் தெடுக்கும் வழியை, டென் மார்க் நாட்டைச் சேர்ந்த கோப்பென்ஹேகன் பல்க லையைச் சேர்ந்த ஆய்வா ளர்கள் கண்டறிந்து உள்ள னர்.

இவ்வாறு பூஞ்சை மூலம் மருந்தை பிரித்தெடுப்பது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். அதோடு இந்த முறையில் அதிக அளவிலான செலஸ்ட்ரோலை உருவாக்க முடியும்.

அவ்வாறு உருவாக்கினால் உடல் பருமன் சார்ந்த பிரச்சினை களுக்கு இது சிறந்த மருந்தாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

Kidhours – Medicine from Poisonous Plant

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.