ஏமன் நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3,60,000 குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். அரசுப் படைகளுடன் போராட்டக்காரர்கள் நடத்திவரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். ஏமன் அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு கொடுத்து வருகின்றன.
ஐநாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் நேற்று ஹவுத்தி குழந்தைகள் போரினால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராட்டக்காரர்களுக்கும் இடையேயான போரால் சுமார் 5,000 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்து அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று கூறுகிறது. மேலும், 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிப் படிப்பை கைவிட்டு இருக்கலாம் என்று கூறுகிறது யுனிசெஃப் அறிக்கை.
யுனிசெஃப் முன்னதாக வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ஏமன் நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3,60,000 குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். அந்நாட்டின் 80 சதவிகித மக்கள் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.