Friday, November 15, 2024
Homeசிறுவர் செய்திகள்எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்க பாதை Discover a Mine in Egypt

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்க பாதை Discover a Mine in Egypt

- Advertisement -

Discover a Mine சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர்.

பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர்.அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

அது ஒரு பழமையான சுரங்கப்பாதை என்றாலும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று இன்றுவரை அறியப்படாததால் அது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக மாறியுள்ளது.இந்த ஆய்வுக்கு சாண்டோ டொமிங்கோ பல்கலைகழகத்தைச் சேர்ந்த கேத்லீன் மார்டினெஸ் தலைமை தாங்கினார்.

- Advertisement -

சுமார் 1305 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை கோயிலின் கீழ் அமைந்துள்ளது. மணற்கற்களால் செதுக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை கிரேக்க தீவான சமோஸில் உள்ள புகழ்பெற்ற யூபலினோஸ் சுரங்கப்பாதையை ஒத்திருக்கிறது.

யூபலினோஸ் சுரங்கப்பாதை கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது அதன் சிறந்த பொறியியல் வடிவமைப்பிற்காக புகழ்பெற்றது.

டபோசிரிஸ் மேக்னா சுரங்கப்பாதை யூபனாலினோஸின் கட்டுமான அமைப்புகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அதன் சில பகுதிகள் யூபனாலினோஸ் சுரங்கப்பாதையை போலவே நீரில் மூழ்கியுள்ளது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் பணிகள் நடைபெற்று வந்தாலும் இந்த சுரங்கப்பாதை ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று மார்டினெஸ் நம்புகிறார்.

கி.மு 230-ல் கட்டப்பட்ட இந்த கோயில் கிளியோபாட்ராவுக்கு தொடர்புடைய அசோரிஸ் மற்றும் ஐசிஸ் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை இன்னும் முழுமையாக காண முடியவில்லை. காரணம் அதன் ஒரு பகுதி மத்தியதரைக் கடலில் உள்ளது.

Discover a Mine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Discover a Mine சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கி.பி 320 மற்றும் 1303-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் அலைகள் காரணமாக அதன் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப்பாதைகளில் கிளியோபாட்ராவின் கல்லறை உள்ளதா என்பதை கண்டறிய மரியாவுட் ஏரிக்கும், மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள சுரங்கங்ளில் தேண்டும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Discover a Mine

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.