Thursday, November 21, 2024
Homeகல்விகட்டுரைஇலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை History of Independence Day Sri Lanka

இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை History of Independence Day Sri Lanka

- Advertisement -

History of Independence Day Sri Lanka

- Advertisement -

132 ஆண்டுகால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 1948 ஃபெப்ரவரி மாதம் 4 ஆக இருந்த போதும், அது தொடர்பான வைபவங்களும் பிற நிகழ்ச்சிகளும் அந்த மாதத்தின் 17 ஆம் திகதிவரை நடைபெற்றிருந்தன. சுதந்திரம் அளிக்கப்படும் நாள் என்பதனால் , ஏற்கனவே அம்மாதம் 4 ஆம் திகதி முழு இலங்கைக்கும் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று ஒரு புதன் கிழமை.

அதிகாலையிலேயே கோயில்கள், பௌத்த விகாரைகள், கிருஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றின் மணிகள் ஒலித்தன. பழைய நாடாளுமன்றத்தில் பிரித்தானியக் கொடிக்குச் சமமாக தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. புதிய பிரதமராகத் தெரிவாகியிருந்த டி.எஸ். சேனாநாயக்கவுக்கு நல்வாழ்த்துக்கள் குவிந்தன. பிரித்தானியாவின் அப்போதைய பிரதமராக இருந்த Clement Attlee யிடமிருந்தும் வாழ்த்துச் செய்தி வந்திருந்தது

- Advertisement -

கி.பி 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரினால் இலங்கையின் கரையோர பிரதேசம் கைப்பற்றப்பட்டது இதனைத்தொடர்ந்து கி.பி 1602 ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையர்கள் அடிமைப்பட வேண்டி ஏற்பட்டதுடன், கி.பி 1766 ஆம் ஆண்டளவில் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் காரணமாக கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்ந்த இலங்கை மக்களும் மீண்டும் அடிமை நிர்வாகத்திற்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

- Advertisement -

கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களின் பிளவு அதிகார குழுக்களினால் 1815 ஆம் ஆண்டளவில் உடரட்ட என்ற மலையகப் பிரதேசத்தையும் எந்தவித சிரமமுமின்றி பிரிட்டன் தமது நிருவாகத்திற்கு உட்படுத்தியது. இதன் பின்னர் முழு இலங்கையும் ஆங்கிலேயரின் நிருவாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டம் இங்கிருந்தே ஆரம்பமாகின்றது என்று கூறலாம். 1818 ஆம் ஆண்டு உடரட்ட என்ற மலையக பெருங்கலகம், 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை கிளர்ச்சி, 1826ஆம் ஆண்டு பிம்தென்னே கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகள் ஆரம்பமானவை நாட்டு மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயாகும். 1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியினால் சிறிய அளவில் அல்லது ஆங்கிலேயரின் நிர்வாகத்தில் அவர்களது கொடூரமான நிர்வாகத்தில் தளர்வை ஏற்படுத்தவேண்டி ஏற்பட்டது.

1831ஆம் ஆண்டில் அரசாங்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோல்புறுக் ஆணைக்குழுவினர், முதல் முறையாக அவர்களது ஆட்சி முறையில் மறுசீரமைப்பு ஆலோசனையை சமர்ப்பித்தனர். பிரித்தானியர்களின் இந்த முயற்சி பெருமளவில் வெற்றியடையவில்லை.

1848 ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி ஆரம்பமானதுடன் அது இலங்கை சுதந்திர போராட்டத்தின் இறுதி கிளர்ச்சியாக அமைந்தது. 1796ஆம் ஆண்டில் இலங்கையின் ஒரு பகுதி மாத்திரம் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் 1815 ஆம் ஆண்டில் முழு நாடும் பிரிட்டனின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த யுகம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முடிவிற்கு வந்தது.

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் கடந்த 72 வருட காலப்பகுதியில் 1948 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இரத்து செய்யப்பட்ட பின்னர் இரண்டு அரசியல் யாப்புகள் மூலம் நாடு முன்னெடுக்கப்பட்டது. இதில் முதலாவது 1972 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மக்கள் குடியரசு யாப்பு ஆகும். அத்தோடு இரண்டாவது 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பு அமைப்பாகும்.

History of Independence Day Sri Lanka
History of Independence Day Sri Lanka

வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து தாய்நாட்டின் இறைமைக்காக இரத்தம் சிந்தியமை மற்றும் உயிரை தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை அளப்பரியதாகும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எமது தாய்நாட்டை கட்டுப்படுத்திய நாள் தொடக்கம் நாட்டு மக்கள் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பின் பெறுபேறே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமாகும்.

அடிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சி மத்தியில் உயிரை தியாகம் செய்த பத்தாயிரம் பேரான தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் போன்ற நாட்டு பற்றைக் கொண்ட அனைவரதும் அர்ப்பணிப்பையும் நாம் மறந்துவிட் முடியாது.

இதன் பெறுபேறாக எதிர்காலத்தில் பயன்களை பெறுவதற்கு இதற்கான பின்புலத்தை வகுப்பது தற்போதைய யுகத்தின் தேவையாகும். இதனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான சமகால அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

 

Kidhours – History of Independence Day Sri Lanka, History of Independence Day Sri Lanka essay

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.