Cloning Organism பொது அறிவு செய்திகள்
குளோனிங் முறையில் முதலாவது ரீசஸ் குரங்கு! சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர்.
அந்த ரீசஸ் குரங்கிற்கு வயது இரண்டு எனவும் பெயர் “ரெட்ரோ” எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் இந்நிலையில் ரீசஸ் குரங்கு மூலம் மருந்துவ பரிசோதனை விரைவுபடுத்த முடியும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் பரிசோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரீசஸ் குரங்கு குளோன் செய்யப்பட்டதற்கு விலங்குகள் நலக் குழு ஒன்று ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.பாலூட்டி இனங்களில் பாலின கலப்பு மூலம் தந்தை மற்றும் தாயின் மரபணுக்கள் இணைந்து சந்ததியை உருவாக்கும், குளோனிங் முறையில் ஒரு விலங்கின் மரபணு மாதிரி நகலை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்படுகிறது.
அதேவேளை குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி என்ற செம்மறி ஆடு, பிரிட்டனில்,1996 ஜூலை 5ல் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Cloning Organism
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.