Thirukkural 484 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / காலம் அறிதல்
”ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். ”
தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
—மு. வரதராசன்
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
—சாலமன் பாப்பையா
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 484
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.