Oldest Sword சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜெர்மனியில் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பழங்கால வாளை கல்லறை ஒன்றில் இருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த ஆயுதம் இன்னும் பிரகாசிக்கும் அளவுக்கு நல்ல நிலையில் உள்ளதாக புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த வாள் கி.மு. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்று பேர் புதைக்கப்பட்ட கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
Live Science-ன் அறிக்கையின்படி, இந்த வாள் பவேரியாவின் நோர்ட்லிங்கன் டவுனில் உள்ள ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தையின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நினைவுச்சின்னப் பாதுகாப்புக்கான பவேரிய மாநில அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
Kidhours – Oldest Sword
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.