Dangerous Fruit சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் மஞ்சள் முலாம்பழம் உட்கொண்டதனால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரபல நிறுவனங்களினால் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் முலாம் பழத்தை உட்கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
செல்மோன்லா எனப்படும் பக்ரீறியா வகை இந்த பழத்தில் தாக்கியதனால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் மாகாணத்தில் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இந்த மரணங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
கனடாவின் எட்டு மாகாணங்களில் இந்த பழத்தை உட்கொண்ட 164 கேர் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மெலிசிட்டா மற்றும் ரூடி ஆகிய பண்டக்குறிகளைக் கொண்ட மஞ்சள் முலாம் பழங்களில் இந்த பக்ரீறியா தாக்கம் ஏற்பட்டு மனிதரை பெரிதும் தாக்கியுள்ளது.
பழத்தை உட்கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கூடுதலாக பாதிக்கப்படுவதாக எச்சரிக்கi விடுக்கப்பட்டுள்ளது.
Kidhours – Dangerous Fruit
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.