Chess Record Tamil Girl சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சதுரங்கப் போட்டியில் எட்டு வயதுடைய தமிழ் சிறுமி ஒருவர் வெற்றிப்பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
இவ்வார இறுதியில் நடைப்பெற்ற ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த எட்டு வயதான தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன் சிறந்த பெண் வீராங்கனையாக முடி சூட்டப்பட்டுள்ளார்.
அதாவது வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா இறுதிச் சுற்றில் இரண்டு முறை ரோமானிய சாம்பியனான 54 வயதான கிராண்ட்மாஸ்டர் விளாடிஸ்லாவ் நெவெட்னிச்சியுடன் ட்ரோ (drow) செய்துள்ளார்.
சர்வதேச மாஸ்டர் மற்றும் இங்கிலாந்து மகளிர் பயிற்சியாளர் லோரின் டி’கோஸ்டாவை தோற்கடித்துள்ளார்.
ஒரு போட்டி விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்கும் இளைய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.எட்டு வயது சிறுமி “வியக்கத்தக்க முடிவை” அடைந்ததாக ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆங்கில சதுரங்க சம்மேளனத்தின் தலைவரான டொமினிக் லாசன், போதனாவின் செயல்திறன் “முற்றிலும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது, ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றுத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி ஹேஸ்டிங்ஸில் நடைபெறும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் போதனா கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதனாவின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Chess Record Tamil Girl
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.