Cat in Space பொது அறிவு செய்திகள்
பூமியில் இருந்து 19 மில்லியன் மைல் தொலைவில் இருந்து அதிக தரத்துடன் கூடிய பூனையின் வீடியோவை நாசா வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பிவைத்துள்ளது.
விண்வெளி என்பது பல்வேறு ஆச்சரியங்களுக்கு உள்ளானது.
விண்வெளி ஆய்வில் உலக நாடுகள் பலரும் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நாசாவுடைய பங்களிப்பு என்பது முதன்மையானதாக இருக்கிறது.
இந்நிலையில், விண்வெளி ஆய்வில் ஒரு புதிய வரலாற்றை நாசா படைத்துள்ளது.வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு மர்மமான எரிக்கல்லை ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் பயணம் செய்துகொண்டிருக்கிற Psyche விண்கலம், பூமியில் இருந்து 19 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது.
இந்த விண்கலத்தில் இருந்து லேசர் மூலம் முதன்முறையாக 15 விநாடிகள் கொண்ட பூனையின் வீடியோ பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விண்வெளியின் ஆழமான பகுதியில் இருந்தும் பூமிக்கு அதிக தரத்துடன் கூடிய வீடியோவை அனுப்ப முடியும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்த தொழிநுட்பம் தகவல் தொடர்புக்கு உதவியாக இருக்கும்.விண்வெளியில் இருந்து பெறப்பட்ட வீடியோவை நாசா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
We just streamed the first ultra-HD video brought to you via laser from deep space. And it’s a video of Taters, a tabby cat.
This test will pave the way for high-data-rate communications in support of the next giant leap: sending humans to Mars. https://t.co/tf2hWxaHWO pic.twitter.com/c1FwybYsxA
— NASA (@NASA) December 19, 2023
அதில், டாட்டெர்ஸ் என பெயரிடப்பட்ட ஆரஞ்சு நிற பூனை ஒளியை தொடர்ந்து விளையாடும் வீடியோ இடம்பெற்றது.இந்த Ultra-HD வீடியோ 19 மில்லியன் மைல் தொலைவில் இருந்து சரியாக 101 விநாடிகளில் ஒரு நொடிக்கும் 267 மெகாபிட்ஸ் என்ற வேகத்தில் பூமியை வந்தடைந்துள்ளது.
முதல் வீடியோவில் பூனை 1920களில் அமெரிக்காவின் ஒளிபரப்பு தொடக்க நிலையில் இருந்தது.அப்போது சோதனைக்காக பெலிக்ஸ் பூனையின் சிலை ஒளிபரப்பப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே விண்வெளியில் இருந்து அனுப்பிய வீடியோவிலும் பூனை காட்சிப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
Kidhours – Cat in Space
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.