Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
இறந்த குழந்தையை புதைக்க தோண்டப்பட்ட குழி.. மண்பானையில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்த மற்றொரு குழந்தை..! அதிர வைக்கும் சம்பவம் - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Sunday, November 24, 2024
Homeசிறுவர் செய்திகள்இறந்த குழந்தையை புதைக்க தோண்டப்பட்ட குழி.. மண்பானையில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்த மற்றொரு குழந்தை..! அதிர வைக்கும்...

இறந்த குழந்தையை புதைக்க தோண்டப்பட்ட குழி.. மண்பானையில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்த மற்றொரு குழந்தை..! அதிர வைக்கும் சம்பவம்

- Advertisement -

உத்திர பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை புதைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது, மண்பாணையில் வைத்து உயிருடன் புதைக்கப்பட்டிருந்த குழந்தை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

உத்திர பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் ஹித்தேஷ் குமார் சிரோஹி. இவரது மனைவிக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவத்தில் பிறந்ததால், சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இதையடுத்து குழந்தையை புதைப்பதற்காக கொண்டு சென்ற சிரோஹி, அதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

- Advertisement -

அப்போது, குழி தோண்டிய இடத்தில் ஒரு 3 அடியில் மண்பானையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று மூச்சு விடத் திணறியபடி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிரோஹி, அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

- Advertisement -

பின்னர், அப்பகுதி பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார் என்பது குறித்தும், குழந்தையின் பெற்றோர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், குழந்தையின் மருத்துவ செலவுகளை பிதாரி செய்ன்பூர் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா ஏற்றுள்ளதாகவும், மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.