Countries Boundary பொது அறிவு செய்திகள்
ஒரு நாட்டின் எல்லை என்பது அதன் தனித்துவத்தையும், பாதுகாப்பினையும் உறுதி செய்யக்கூடிய அம்சமாகும்.
ஆனால், உலக நாடுகள் பல தனது எல்லைகளை வேற்று நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில், தனது எல்லை பகுதியை அதிகப்படியான நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ளும் அதிக எல்லை கொண்ட நாடுகள் குறித்துதான் இப்பதிவின் வாயிலாக காண உள்ளோம்.
1.சீனா – 14 நாடுகள் -: கொரியா, மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், என 14 நாடுகளுடன் சீனா தனது 22800 கிமீ நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது.
2.ரஷ்யா – 14 நாடுகள் -: பின்லாந்து, நோர்வே, எஸ்டோனியா, வாட்வியா, லிதுவேனியா, போலாந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், மங்கோலியா, சீனா மற்றம் வடகொரியா என 14 நாடுகளுடன் ரஷ்யா தனது எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது.
3.பிரேசில் – 10 நாடுகள் -: உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசுலா, கயானா, சுரினாம் மற்றும் பிரெஞ்சு கயானா துறையுடன் தனது எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது.
4.ஜேர்மனி – 09 நாடுகள் -: சுமார் 3767 கிமீ அளவு கொண்ட தனது பகுதியை டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க், பிரான்ஸ், சுவிட்சர்வாந்து, ஆஸ்ட்ரியா, செக் குடியரசு மற்றும் போலாந்து என 9 நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்கிறது.
5.காங்கோ – 09 நாடுகள் -: மத்திய ஆப்பிரிக்கா, தெற்கு சூடான், உகாண்டா, சாம்பியா, அங்கோலா மற்றும் ஜாம்பியா என 09 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது.
6.ஆஸ்திரியா – 08 நாடுகள் -: ஜேர்மனி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ஸ்வோவேனியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆஸ்திராய தனது எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது.
7.தன்சானியா – 08 நாடுகள் -: கிழக்கு ஆபிரிக்கா நாடான தன்சானியா தனது எல்லையை உகாண்டா, கென்யா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, சாம்பியா, மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்கிறது.
Kidhours – Countries Boundary
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.