World Dangerous Mines பொது அறிவு செய்திகள்
மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும் சுரங்கங்கள் அடிப்படையானவையாக அமைந்துள்ளது.
தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற உலோகங்கள், நிலக்கரி போன்ற எரிபொருட்கள், மற்றும் வைரங்கள், இரத்தினங்கள் போன்ற அரிய கற்கள் உட்பட பல்வேறு கனிமங்களைப் பெறுவதற்கு சுரங்கங்கள் அவசியமாய் இருந்தாலும் கூட, சுரங்கப் பணி என்பது ஒரு ஆபத்தான தொழில் என்பதால் சுரங்கத் தொழிலாளர்கள் பல்வேறு பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகின்றனர்.
அந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் அமைந்துள்ள கிராஸ்பெர்க் சுரங்கம், உலகின் மிகப்பெரிய தங்க மற்றும் செம்பு சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 14,000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால், அங்கு கடுமையான வானிலை, அதிகமான கதிர்வீச்சு, மற்றும் நில அதிர்ச்சிக்கான ஆபத்து ஏற்படுகிறது.
அடுத்து அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் அமைந்துள்ள பிங்காம் கன்யோன் சுரங்கம், மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சுரங்கமாகும், இந்தச் சுரங்கம் 2,500 அடி ஆழத்துக்கு செல்கிறது, அங்கு நிலச்சரிவு, பாறைகள் விழுதல், மற்றும் தூசி வெடிப்பு ஆகிய அபாயங்கள் உள்ளன.
சிலியில் உள்ள சுகுயிகாமாடா சுரங்கம், உலகின் மிகப்பெரிய திறந்தவெளி செம்பு சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், அங்கு உயரமான கதிர்வீச்சு, வறட்சி, மற்றும் மலைப்பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிக்கான ஆபத்துகள் உள்ளன.
சுவீடனில் உள்ள கிருனா சுரங்கம், உலகின் மிகப்பெரிய இரும்புத் தாது சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 2,000 அடி ஆழத்துக்கு செல்வதால், அங்கு நிலச்சரிவு, பாறைகள் விழுதல், மற்றும் எரிவாயு வெடிப்பு ஆகிய அபாயங்கள் இங்கு உள்ளன.
உஸ்பெகிஸ்தானில் உள்ள முருந்தாவு சுரங்கம், உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், அங்கு கடுமையான வானிலை, உயரமான கதிர்வீச்சு, மற்றும் நில அதிர்ச்சிக்கான ஆபத்துகள் உள்ளன.
கனடாவில் உள்ள எக்டி வைர சுரங்கம், உலகின் மிகப்பெரிய வைர சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் கடுமையான ஆர்க்டிக் காலநிலைப் பகுதியில் அமைந்திருப்பதால், அங்கு உறைந்த தரைகள், பனிச்சரிவுகள், மற்றும் கரடித் தாக்குதல்கள் போன்ற அபாயங்கள் இந்த சுரங்கத்தில் ஏற்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள ஒலிம்பிக் டம் சுரங்கம், உலகின் மிகப்பெரிய செம்பு, தங்கம், மற்றும் யுரேனியம் சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் ஆழமான நிலத்தடி சுரங்கம் என்பதால், அங்கு நிலச்சரிவு, பாறைகள் விழுதல், மற்றும் தூசி வெடிப்பு ஆகிய அபாயங்கள் உள்ளன.
போட்ஸ்வனாவில் உள்ள ஜவானெங் வைர சுரங்கம், இது உலகின் மிகப்பெரிய வைர சுரங்கங்களில் ஒன்றாகும்., இது போட்ஸ்வானாவின் வடகிழக்கு பகுதியில், காட்பிரேக் மாகாணத்தில் அமைந்துள்ள, இந்தச் சுரங்கம் 1971 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, மேலும் இது போட்ஸ்வானாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த ஜவானெங் சுரங்கம் ஒரு திறந்தவெளி சுரங்கமாகும், இது சுமார் 3 கிலோமீட்டர் நீளம், 1.5 கிலோமீட்டர் அகலம் மற்றும் 200 மீட்டர் ஆழம் கொண்டது, இந்த சுரங்கத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 மில்லியன் கரட் வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, இது உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 15% ஆகும்.
அதேநேரம் ஜவானெங் சுரங்கம் பல அபாயங்களை உள்ளடக்கியிருப்பதால், இந்தச் சுரங்கத்தில் நிலச்சரிவு, பாறைகள் விழுதல் மற்றும் தூசி வெடிப்பு ஆகிய அபாயங்கள் உள்ளன, மேலும், இந்த சுரங்கம் ஒரு பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது, அங்கு வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்குக்குத் தெற்கே அமைந்துள்ள மொப்பெங் தங்க சுரங்கம், உலகின் மிகவும் ஆழமான சுரங்கமாகும், அதன் செயற்பாட்டு ஆழம் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 3.16 கி.மீ முதல் 3.84 கி.மீ ஆழத்தில் உள்ளது.
இந்தச் சுரங்கமானது, கடுமையான வெப்பம், ஈரப்பதம் மற்றும் பாறை அழுத்தம் கொண்ட சவாலான சூழலில் அமைந்துள்ளது, சுரங்கத் தொழிலாளர்கள் குன்று விழும் அபாயங்கள், பாறை வெடிப்புக்கள் மற்றும் நச்சு வாயுக்கள் வெளியேற்றம் போன்ற ஆபத்துக்களைக் கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய அபாயங்கள் இருந்தபோதிலும், மொப்பெங் தங்க சுரங்கம் தென் ஆப்பிரிக்க பொருளாதாரத்திற்கு அதிகளவு பங்களிப்பை வழங்குகின்றது, இது 12,000 க்கும் மேற்பட்ட மக்களை வேலைக்கு வைத்திருப்பதால் ஆண்டுக்கு சுமார் 500,000 பவுன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.
இதன் வாயிலாக அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு அதிகளவு வருமானம் கிடைப்பது முக்கியமான விடயமாகும்.
Kidhours – World Dangerous Mines, World Dangerous Mines update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.