Valley of Peace சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உ லகின் மிகப்பெரிய கல்லறை தோட்டம் ஈராக்கின் நஜாப் நகரில் அமைந்துள்ளது. வாடி அல் சலாம் என்று அழைக்கப்படும் இதற்கு ஆங்கிலத்தில் ‘அமைதி பள்ளத்தாக்கு என்று பொருள் கொள்ளப்படுகிறது.
சுமார் 917 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது இந்த கல் லறை தோட்டம். இங்கு தீர்க்கதரிசிகள், மன்னர்கள், விஞ்ஞானிக உட்பட 60 லட்சத் துக்கும் மேற்பட்ட வர்களின் உடல் கள் அடக்கம் செய்யப்பட்டுள் ளது. யுனஸ்கோ வின் கருத்துப்படி, 1,400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்லறையில் உடல் அடக்கம் நடைபெறு கிறது.
நஜாப் நகரின் மொத்த பரப்பளவில் சுமார் 13 சதவீதத்தை இந்த கல்லறை தோட்டம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. உலகெங்கிலும் வசிக்கும் முஸ்லிம்கள் இங்கு வந்து அடக்கம் செய்யப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் தனித்துவமானதாகவும், அந்த காலகட்ட கலாசார பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாகவும், சாட்சியாகவும் இந்தக் கல்லறை தோட்டம் அமைந்தி ருப்பதாக”யுனஸ்கோ குறிப்பிடுகிறது.
விதவிதமான கட்டமைப்புகளுடன் இந்தக் கல்லறை தோட்டம் வடிவமைக்கபட்டிருக்கிறது. அல்-சசானி சகாப்தத்தின் (637-226) வழி வந்த மன்னர்களும், தலை வர்களும், சுல்தான்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் யுனஸ்கோ குறிப்பிடுகிறது.
மேலும் ஹம்தானியா, பாத்திமியா, அல்-புவைற்றியா,சபாவாயா, கஜர் மற்றும் ஜலைரியா ஆகிய மாகாணங்களை’ ஆண்ட இளவரசர்களும் இந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட் டுள்ளனர்.
இமாம் அலி இப்னு அபுதாலி பின் நினைவிடமும் ஆலயமும் இங்கு அமைந்துள்ளது.வரலாற்று மாபுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் இந்தக் கல்லறைக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் அங்குள்ள மக்கள் தங்கள் நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் கல்லறை தோட்டத்தை பாவிக்கிறார்கள்.
Kidhours – Valley of Peace
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.