Free Transportation சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சுமார் 6 லட்சம் பேர் வாழக்கூடிய ஒரு தேசம், லக்ஸம்பர்க். அங்கே
சுவசிக்கும் பெரும்பாலானவர்களிடம் கார் இருக்கிறது. அதனால் அரசுப் போக்குவரத்தை அவ்வளவாக மக்கள் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொருவரும் காரில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் பெருபிரச்சினையாக உள்ளது.
போக்குவரத்து நெரி சலைக் கட்டுப்படுத்துவதற் காக லக்ஸம்பர்க் போக்கு வரத்து அமைச்சகம் ஒரு அதிரடியான முடிவை எடுத் திருக்கிறது.
ஆம்..! அரசுக்குச் சொந்த மான பேருந்து, ரெயிலில் பயணிப்பவர்கள் யாரும் காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டிய தில்லை. எல்லாமே இலவசம். நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து இலவசம்.
இப்படி, ஒரு நாடு அறிவிப்பது உலகில் இதுவே முதல் முறை. ரெயிலின் முதல் வகுப்பு பெட்டி மற்றும் இரவு நேரங்களில் செயல்படும் சில சிறப்பு பேருந்துகளுக்கு மட்டும் பொருந்தாது, என்றாலும் மற்றபடி எல்லாமே இலவசமாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதனால் லக்ஸம்பர்க்கின் குடிமகன்கள், ரொம்பவே குஷியாகிவிட் டார்கள். தங்களின் சொந்த கார்களை வீடுகளிலேயே நிறுத்திவிட்டு, பொது போக்குவரத்துகளில் பயணித்து வருகிறார்கள்.
Kidhours – Free Transportation
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.