Language of Elephants சிறுவர் கட்டுரை
யானைகள் பெரும்பாலும் கூட்ட மாகவே பயணிக்கும். இரை தேடு வது, தண்ணீர் பருகுவது, வேறு இடத் திற்கு இடம் பெயர்வது என எந்த நகர்வாக இருந்தாலும் சக யானை களை பின் தொடரும். சில சமயங் களில் ஆங்காங்கே தனித்து நிற்கும் யானைகளை ஒன்று சேர்ப்பதற்கு யானைகள் ரகசிய மொழியை பின் பற்றும்.
முணு முணுத்தல், எக்காளமிடுதல் என ஒலியுடன் கூடிய சத்தங்களை எழுப்பும். ஆனால் இந்த ஒலியை சக யானைகளால் மட்டுமே கேட்க முடி யும்.மனிதர்களால் கூர்ந்து கவனித் தால் கூட கேட்க முடியாது. அந்த அளவிற்கு ரகசிய மொழி மூலம் தக வல்களை பரிமாறிக்கொள்ளும். அதிர்வெண் மிகவும் குறைந்த இந்த ஓசையை அகவொலி என்று குறிப் பிடுகிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.
இடி சத்தத்தின் அதிர்வலைகள் போன்று மிகவும் குறைவா அதிர்வுள்ள ஓசையை வெளிப்படுத்து கின்றன. அவை காற்றில் கலந்து புல், மரம், செடி-கொடிகளை கடந்து தூரத் தில் இருக்கும் மற்ற யானைகளை சிதையாமல் சென்றடைகின்றன. அந்த அளவுக்கு ரகசிய மொழியாய் காற்றில் கலந்து தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.” கடுமையான வறட்சி நிலவும் கால
கட்டங்களில் ஓடைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் சிறுசிறு பள்ளங்களில் தேங்கி நிற்கும். யானைகளால் பருக முடியாத அள வுக்கு நீர் வறட்சி நிலவும். அந்த சமயங்களில் புதிய நீரூற்றுகளை கண்டறிவதற்கு சில யானைகள் புறப் பட்டு செல்லும். எங்காவது நீர் நிலையைக் கண்டறிந்து அங்கு தண்ணீர் பருக முடிந்தால் ஏற்படும் மன திருப்தியை அகவொலி மூலம் தூரத்திலுள்ள யானைகளுடன் பகிர்ந்துகொள்ளும்.சில சமயங்களில் யானைகள் எல் லாமே தனித்தனியாக பிரிந்து சென்றுவிடும்.
அப்படி காடுக்குள் தனியாக திரிந்த யானைகள் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து செல் லும். எவ்வளவு தூரம் வரை சுற்றித் திரிய வேண்டும்? எங்கு, எப்படி ஒன் றிணைய வேண்டும்? ஒன்றன்பின் ஒன்றாக எப்படி பாதையை பின்பற்றி வர வேண்டும் என்பது போன்ற சங்கதிகளை அகவொலி மூல மாகவே யானைகள் கடத்துகின்றன.சில நேரங்களில் 5 கி.மீ. அல்லது அதற்கும் அப்பாற்பட்ட தொலைவில் தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி கூட யானைகள் கூட்டமாக சென்றடைந்துவிடும்.
அந்த அளவிற்கு யானைகள் அபார மோப்ப சக்தி கொண்டவை. சில நேரங்களில் மோப்பத்தை உணர்ந்து கொள்ள முடியாதபடி எதிர்க்காற்று வீசும். அப்போதும் கூட, எங்கோ தனித்து திரியும் யானைகள், வியக்கத்தக்க முறையில் ரகசிய மொழி மூலம் ஒரே நேரத்தில் ஒன்று கூடிவிடுகின்றன.
Kidhours – Language of Elephants , Language of Elephants essay
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.