influenza in China சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் குழந்தைகள் கொத்து கொத்தாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா போன்று புதுவித கிருமியால் இந்த காய்ச்சல் பரவவில்லை என்று அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகிற்கே மரண பயத்தை காட்டியது. அதன் பாதிப்பு ஓய்ந்து வரும் நிலையில், தற்போது நிமோனியா நோய் பாதிப்பைச் சமாளிக்க சீனா போராடி வருகிறது.
அங்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக, பெய்ஜிங், லியோனிங் மாகாணத்தில் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், நிமோனியா பாதிப்பு குறித்து விரிவான விளக்கம் அளிக்க சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கோரியது.
அதற்கு, நாட்டின் வடக்கு பகுதியில் சுவாச பாதிப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு வழக்கமாக பரவக்கூடிய நோய்கிருமிகளே காரணம் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் வந்த முதல் குளிர் காலம் இது என்பதால் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அசாதாரணமான அல்லது புதுவித நோய்க்கிருமிகளால் இந்த காய்ச்சல் பரவவில்லை என்றும் சீனா விவரித்துள்ளது.
Kidhours – influenza in China
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.