Recipe Prawns Vada பொழுதுபோக்கு
தேவையான பொருட்கள்:
1.சின்ன இறால் – ஒரு கிலோ
2.வெங்காயம் – 200 கிராம்
3.இஞ்சி – 10 கிராம்
4.பூண்டு – 50 கிராம்
5.தக்காளி – 100 கிராம்
6.பச்சை மிளகாய் – 5 (நறுக்கவும்)
7.மிளகாய்த்தூள் -10 கிராம்
8.கொத்தமல்லித்தூள் -5 கிராம்
9.மஞ்சள்தூள் – 10 கிராம்
10.பெ.சீரகம் -5 கிராம்
11.கறிவேப்பிலை – சிறிதளவு
12.பொட்டுக்கடலை – 150 கிராம்
13.உப்பு – தேவையான அளவு
14.எண்ணெய் – 100 மில்லி
சுட்டு எடுக்க:
15.எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பெ.சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின்னர் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு, நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கிய பின் மஞ்சள்தூள் கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, பின் கழுவி வைத்திருக்கும் இறால் மீன்களைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கும்போதே தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின் இதை இறக்கி வைத்துவிட்டு பொட்டுக்கடலையை பவுடராக்கி இத்துடன் சேர்த்து வடைக்குத் தேவையான மா போல் நன்கு பிசையவும்.
பின்னர் மாவை சூடான எண்ணெயில் வடைகளாக தட்டி போட்டு பொரித்தெடுத்தால் இறால் வடை தயார்.
Kidhours – Recipe Prawns Vada
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.