பார்சிலோனா அணியின் காற்பந்து வீரரான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி பிஃபா அனைத்துலக சிறந்த காற்பந்து வீரர் விருதைப் பெற்றார். லியோனல் மெஸ்ஸி கடந்த ஆண்டில் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தில் அதிக கோல்களை அடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும், லியோனல் மெஸ்ஸி தங்க காலணியையும் பெற்றார்.
இம்முறை லிவர்பூல் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் வான் டைக் க்கும் மெஸ்ஸியும் இவ்விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டனர். கடந்த ஆண்டின் அடைவுநிலையினைக் கொண்டே இந்த விருது வழங்கப்பட்டிருகிறது. இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்று மெஸ்ஸி தெரிவித்தார். காற்பந்து உலகில் மெஸ்ஸிக்கு இணையாக சிறந்த ஆட்டக்காரராக கருதப்படும் போர்த்துகலின் கிரிஸ்டியானோ ரொனால்டோ இந்நிகவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.