Xwatch B2 சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் புரோமேட் நிறுவனம் எக்ஸ்வாட்ச் பி 2 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.01 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது. இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 15 நாட்கள் வரை நீடித்திருக்கும்.
123-க்கும் அதிகமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரிகளின் அளவை வெளிப்படுத்தும். புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. உள்ளீடாக மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதனால் அழைப்புகளை மேற்கொள்வது எளிது.
இதில் மேம்பட்ட தொழில்நுட்பத்திலான பெடோமீட்டர் உள்ளதால் இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மற்றும் தூக்கக் குறைபாடுகளை துல்லியமாக உணர்த்தும். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு ஆ இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போனுடன் இணைத்துப் பயன்படுத்தும் வகையிலான வடிவமைப்பு கொண்டது. குரல் வழிக் கட்டுப் பாடு மூலமும் செயல்படும்.
நீலம், கருப்பு, கிராபைட் வண்ணங்களில் வந்துள்ள ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை ₹2 ஆயிரத்து 499.
Kidhours – Xwatch B2
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.