Rubik’s Cube History பொது அறிவு செய்திகள்
வண்ணம்யமான சதுரங்கம். இதை மேலும் கீழுமாக நகர்த்தலாம். ஒரே வண்ணமாக சேர்க்கலாம், இல்லையேல் பல எண்ணக் கலவையாக மாற்றலாம். இப்படி பலரது கைகளில்,விளையாடும் அந்த கருவியின் பெயர், ‘ரூபிக் கியூப்’. இதை மஜிக் கியூப் என்று அழைக்கிறார்கள். 1974-ம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்றும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோர் கைகளிலும் இது சுழல்கிறது. ‘உலகின் மிக புகழ் பெற்ற மெக்கானிக்கல் புதிர் விளையாட்டு’ எனும் பெருமைக்குரிய இந்த ‘கியூப்’ பற்றி சில தகவல்கள்…
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சிற்பியும், கட்டுமானப் பேராசிரியருமான எர்னோ ரூபிக் என்பவர்தான் இதைக் கண்டுபிடித்தார். இதனால்தான் ரூபிக் கியூப் என அழைப்பர்.
”ஐடியல் டாய்ஸ்’ என்ற நிறுவனம் இந்த விளையாட்டின் உரிமைகளைப் பெற்று 1980-ம் ஆண்டு முதல் இதை விற்பனைக்குக் கொண்டு வந்த எண்பதுகளின் மத்தியில் இந்த ரூபிக் கியூப், உலகில் ஐந்து பேரில் ஒருவர் வசம் இருந்ததாம்.
ரூபிக் கியூப் என்பது பொதுவாக ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு கன சதுரம். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்றுக்கு மூன்றுவரிசையில் ஒன்பது சதுர ஸ்டிக்கர்கள் ஒட்டப் பட்டிருக்கும். ஒவ்வொரு ஸ்டிக்கரும் ஒவ்வொரு நிறத்தில் இருக் கும். வெள்ளை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, மஞ்சள் என்று ஆறுநிறங்களில் அந்தச் சதுரங்கள் இருக்கும். அந்த கனசதுரத் தைத் திருகி நம்மால் சதுரங்களை இடம் மாற்ற முடியும். ஒவ் வொரு பக்கத்திலும் ஒரே நிறம் கொண்ட சதுரங்களை வரச் செய்வதுதான் இந்த விளையாட்டின் வெற்றி
உலக கியூப் அசோசியேஷன் என்ற அமைப்பு 2003-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டில் சாம்பியன்ஷிப் போட்டி களை நடத்தி வருகிறது. ஒரு கையை மட்டும் பயன்படுத்தி இதை விளையாடுவது, கால்களை மட்டும் பயன்படுத்து வது என்று இதிலும் வெரைட்டி உண்டு.
*மிக விரைவாக இந்த விளையாட்டை முடித்தவர் என்ற சாதனையை, மேக்ஸ் பார்க் என்ற அமெரிக்கர் வசப்படுத்தி இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த ஒரு போட்யில், இவர் இந்த விளையாட்டை 3.13 நொடிகளில் முடித்தார்.
. ஒரு காலத்தில் இந்த விளையாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறார்கள் பலர். தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடுவதால் வரும் கை வலியை ‘ரூபிக்ரிஸ்ட்’, ‘ரூபிக் தம்ப் என்றே அழைக்கின்றனர். இந்த கியூப் வடிவில் இன்று சாக்லேட்டு கள் வருகின்றன. எம்.பி-3 பிளேயர்கள் உள்ளன. வைரங்கள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த கியூப்கள் கூட கிடைக்கின்றன. உலகின் மிகப் பெரிய ரூபிக் கியூப், அமெரிக்காவில் நாக்ஸ்வில் என்ற ஊரில் உள்ளது. இதன் உயரம் 3 மீட்டர். எடை அரை டன்.
ரூபிக் கியூப், சதுரம் என்ற வடிவத்தை தாண்டி, முக்கோணம், பாலிஹெட்ரான் கியூப், ஸ்பியர் கியூப், டெட்ராஹெட்ரான் கியூப், கேக் கியூ, கியர் கியூப்… என பல வடிவங்களில் வருகிறது.
Kidhours – Rubik’s Cube History
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.