Miss World பொது அறிவு செய்திகள்
72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர்.
பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று இந்திய நேரப்படி இன்று காலை எல் சால்வடோர் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடந்தது.இந்த போட்டில் நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகள் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர்.
இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.
Kidhours – Miss World
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.