Sri Lanka Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் என கூறியுள்ள புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம், இதனால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென மேலும் தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கைக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் திருச்செந்தூரில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கந்தசக்ஷ்டி விரதம் ஆரம்பித்துள்ள நிலையில் திருச்செந்தூரில் பெருமளவான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய சென்றுள்ளநிலையில், திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Kidhours – Sri Lanka Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.