World Pineapple Product சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நமது கண்களுக்கு கரடுமுரடான பழங்களாக தெரிந்தாலும் மற்ற பழங்களை விட தனித்துவமான சுவையை கொண்டுள்ளது அன்னாசிப்பழங்கள். “அன்னாஸ் கொமோசஸ் என அறிவியல் பெயரைக்கொண்ட இந்த அன்னாசி ஒரு வெப்பமண்டல பழமாகும். இது தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கிறது என கூறப்பட்டாலும் தற்போது உலகம் முழுவதும் வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாக உள்ளது. கடினமாக தோலைக் கொண்டிருந்தாலும் இதில் உள்ள தனித்துவமான இனிப்புச்சுவையை மற்ற பழங்களால் ஈடு செய்ய முடியாது.

இதுப்போன்ற நன்மைகளைத்தவிர, அன்னாச்சிப் பழங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கலாச்சார மற்றும் குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்த அன்னாச்சியின் படங்கள் பொதுவாக கலை, கைவினைப் பொருள்கள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் பல்வேறு வடிவங்களில் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த அன்னாசிப்பழங்கள் உலகில் எந்த நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது? எது முதல் இடத்தில் உள்ளது? என்பது பற்றி முழு விபரங்களை இங்கு தெரிந்துக்கொள்ளுவோம்.
அன்னாசிப்பழங்களை உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகள்: உலகிலேயே அன்னாசிப்பழம் உற்பத்தி செய்யும் நாடுகளில் கோஸ்டாரிகா முதலிடத்தில் உள்ளது. இங்கு 29,30,661 டன்கள் உற்பத்தியாகிறது. இதையடுத்து 26,94,555 டன்கள் உற்பத்தி செய்து பிரேசில் இரண்டாவது இடத்திலும், பிலிப்பைன்ஸில் 20,78,126 டன்கள் அன்னாசிப் பழங்கள் உற்பத்தி செய்து 3வது இடத்திலும் உள்ளது.
குறிப்பாக 19,64,000 டன்கள் உற்பத்தி செய்து இந்தியா 5 வது இடத்தைப் பெற்றுள்ளது. 18,11,591 டன்கள் என தாய்லாந்து 6வது இடத்திலும், 15,91,276 டன்கள் என நைஜிரியா 7வது இடத்திலும், 15,50,965 டன்கள் என சீனா 8வது இடத்திலும், 13,96,153 டன்கள் என இந்தோனேசியா 9வது இடத்திலும், 8,75,839 டன்கள் என மெக்ஸிகோ 10வது இடத்தை பிடித்து அன்னாசி பழங்களை உற்பத்தி செய்துவருகின்றன.
Kidhours – World Pineapple Product
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.