Injection Needle Metal சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நம் உடலில் நேரடியாக திரவ வடிவலான மருத்தை செலுத்துவதற்கு ஊசி மிக முக்கிய கருவியாக மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுகிறது. மெல்லிய வடிவில் இருக்கும் ஊசியை எந்த உலோகத்தினால் உருவாக்குகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? இது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் அதனின் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளுவதற்கும் மருத்துவ உலகில் பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் முக்கியமாக இருப்பது அதனை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசிதான்.
உடலின் தோலுக்குள் சென்று மருத்தை துரிதமாக செலுத்த மெல்லிய வடிவில் பலமான ஊசி தேவைப்படுகிறது. இந்த ஊசிகள் எந்தவிதமான உலோகம் கொண்டு தயாரிப்பார்கள் என்று ஒருவர் Quora தளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பல்வேறு விதமான பதில்கள் கிடைத்துள்ளது.
ஊசிகளை உருவாக்குவதற்கு கார்பன் எஃகு அல்லது துருப்பிடிக்காத எஃகு முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது என்று பெருமைபான்மையான பதில்கள் தெரிவிக்கின்றன. ஆம், ஊசிகள் உடலில் நுழைவதற்கு ஏதுவாகவும், திடமானதாகவும் இருப்பதற்காக எஃகு பயன்படுத்தப்படுகிறது. ஊசிகள் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும்.
எனவே எஃகு வகையில் துருப்பிடிக்காத எஃகு ( Stainless steel) பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஊசிகளுடன் மருந்துகள் பதப்படுத்தப்படுவதற்கும் இந்த உலோகங்கள் சிறந்ததாக இருக்கின்றன.
உடலில் சரியான முறையில் மருத்துகளை செலுத்துவதற்கு இந்த உலோகங்களினால் செய்யப்படும் ஊசிகள் உபயோகமாக இருக்கின்றன. மருத்துவ உலகில் ஊசியில் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்பது மறுக்கமுடியாத உண்மையாக உள்ளது.
Kidhours – Injection Needle Metal
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.