Thirukkural 418 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / கேள்வி
”கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.”
கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும் ‘
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. ‘
—மு. வரதராசன்
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே. ‘
—சாலமன் பாப்பையா
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும் ‘
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 418
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.