ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டுகளை உற்று நோக்கியபடியே நீண்ட நேரம் விளையாடும் குட்டீஸ்களுக்கு, கண் அழுத்த நோய் ஏற்படும் அபாயங்கள் நிறைய உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மனித உடலில் கண்கள் மிக உன்னதமான படைப்பு என்பது அனைவராலும் உணர முடியும் காட்சிகளை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்பி அதனை உணர வைக்கும் மிக அற்புதமான பணியை செய்கிறது நமது கண்கள். அப்படிப்பட்ட கண்களை நாம் மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டாமா கண்களுக்கு வெளியே அதனை அழகுப்படுத்த அதீத ஆர்வம் காட்டும் நாம் கண்களை பாதுகாக்க அக்கறை காட்டுவதில்லை.
இதற்கு கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை உயர்வதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நிமிடத்திற்கு 6 முறை அன்னிச்சை செயலாக மூடி திறக்கும் இமையின் வேலை என்பது கார் கண்ணாடியை துடைத்து பளபளக்க செய்யும் வைப்பருக்கு ஒப்பானது தான் இந்த இமையின் வேலையை கூட சரியாக நாம் செய்யவிடுவதில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம். செல்போன், டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட கண்ணை பாதிக்கும் அதீத வெளிச்சத்தை தரும் மின்னணு சாதனங்களை கண்கொட்டாமல் உற்று நோக்கி மூழ்கி கிடக்கிறோம்.
குட்டீஸ்களை திசை திருப்புங்கள் அதிலும் குழந்தைள் மற்றும் சிறுவர்கள் ஒருபடி மேலே போய் பொழுதுக்கும் வீடியோ கேம் விளையாடி கண்ணை கெடுத்து கொள்கின்றனர். குட்டீஸ்கள் தங்களின் இருகண்களையும் ஸ்மார்ட் போனில் உள்ள கேம்களை விளையாடுவதற்கெனவே கடிவாளம் கட்டி விடுகின்றனர். முதலில் அவர்களை பாதுகாக்க வீட்டிற்கு வெளியே அழைத்து சென்று விளையாட ஊக்குவியுங்கள்.
முதலில் நாம் என்ன செய்கிறோம் இவர்களுக்கு பெரியவர்களான நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சதா சர்வ காலமும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராமிற்குள் மூழ்கி விடுகிறோமே. இளைஞர்கள் மற்றும் தங்கள் வேலைக்கு என்று தினமும் கணினியோடு நேரத்தை கழிக்கும் பணியாளர்கள் என பலருக்கும் கண்களைப் பற்றி போதிய அக்கறையோ விழிப்புணர்வோ இல்லை என்பதே நிதர்சனம். எச்சரிக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் செய்வதால் தற்போது வரை சென்னையில் மட்டும் 10 சதவீதம் பேர் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ஸ்மார்ட் போனே கதி என்று இருந்தால் மக்களில் பலரும் பார்வை குறைபாட்டிற்கு ஆளாகலாம், அல்லது பார்வையை இழக்க நேரிடலாம் என்றும் வார்னிங் கொடுக்கின்றனர் கண் மருத்துவர்கள்.
கண் அழுத்த நோய் அறிகுறி
கண் அழுத்த நோய் ஏற்பட்டால் முதலில் தலைவலி ஏற்படும். பின்னர் கண்கள் சிவப்பாகி எரிச்சல் உண்டாகும். அப்போதும் நாம் உஷாராகி சிகிச்சை எடுக்க தவறினால், பார்வை திறன் மெல்ல குறுகி நேராக உள்ள பொருட்கள் மட்டுமே கண்களுக்கு தெரியும். இந்த நிலை வந்த பின்னும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ஸ்மார்ட் போனே கதி என்று சுற்றினால், பார்வையை இழக்க நேரிடும் என கூறுகின்றனர் மருத்துவர்கள்.
அப்பப்போ வேறு பொருளை பாருங்க கணினியில் தான் பணியில் என்று இருப்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 20 நிமிடத்திற்கு 20 நொடியாவது கண்களை வேறு பொருட்களை உற்று நோக்க அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் கூடுமானவரை செல்போனிலும், டேப்லெட்டிலும் விளையாடுவதை தவிர்த்து பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்று விளையாடி மகிழ வையுங்கள். குழந்தைகளை கொஞ்சினா மட்டும் போதுமா குழந்தைகளை கண்ணே மணியே… என்று கொஞ்சினால் மட்டும் போதுமா. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களை பாதுகாக்க வேண்டாமா என வினவும் மருத்துவர்கள், பொது வெளியில் அவர்களை விளையாட வைத்தால் உடலில் வியர்வை வருவது போல, கண்ணின் வலது மற்றும் இடது புறங்களில் அமைந்துள்ள குளுமோமா சுரபி இயல்பாக சுரக்கும். கண் அழுத்த நோயும் நீங்கும் என அட்வைஸ் செய்துள்ளனர் கட்டுரை படித்தவுடன் பொங்கும் கடமையை உடனே மறந்து விடாமல் உங்களையும் கவனிங்க.. அதை விட குழந்தைகளை இன்னும் அதிகமா கவனிங்க பெரியவர்களே..