விமானத்தினுல் தகவல்களை சேமிப்பதற்காக பயன்படும் ஒருதொழினுட்பக் கருவிதான் கருப்புப்பெட்டி.விமானம் விபத்துக்குள்ளானால் அதைப்பற்றிய முழு விபரங்களைகாரணங்களைஅறிவதற்கும் ஆராய்ச்சி செய்வாற்கும் இக்கருவிபெரிதும் உதவுகிறது. விமானத்தின் முழு விபரங்களின் பதிவுசாதனம் (ATR) என்பதே கருப்புப்பெட்டியென அழைக்கப்படுகிறது. இதனை கருப்புபெட்டி என அழைத்ததாலும் இதன் உண்மைநிறம் செம்மஞ்கல் ஆகும். விமானம் விபத்துக்குள்ளாகும் போது எப்போதுமே அதன் பின்பகுதிக்கு சேதம் குறைவாகவே இருக்கும். இதனால் இக்கருப்புப்பெட்டியை இப்பகுதியிலேயே பொருத்துவார். இக் கருப்புபெட்டியில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று விமானியறை குரல் பதிவு செய்யும். இது கடைசி இரண்டு மணித்தியாலத்திற்கு விமானிகளுக்கும் இதரைக் கட்டுப்பாட்டுமையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.
இன்னொரு பகுதி விமானத்தின் தரவுகளை பதிவு செய்யும். விமானத்தின் வேகம் விமானம் பறந்த உயரம் பொறிகளின் செயற்பாடு விமானத்தின் பிற கருவிகளின் செயற்பாடு விமானத்தினுள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400வகையான காரணிகளை பதிவு செய்யும். டைட்டானியம் என்ற கனிமத்தால் செய்யப்பட்ட இவை புவிஈர்புவிசையைவிட 3400 மடங்குவிசையையூம் 10000 ஊயை விடவும் அதிக வெப்ப நிலையையும் தாங்க க்கூடியது. விமானம் விபத்துக்குள்ளானால் கருப்புப் பெட்டியில் இருந்து தொடர்ந்து சமிஞ்ஞைகள் வந்துக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இச்சமிஞ்ஞை தொடரும். இதுசுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ளதரவுகள் பாதுகாப்பாக இருக்கும். நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் இருந்தால் மிதக்கும் தண்மையுடனும் எளிதில் திறக்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
இக் கருப்புப் பெட்டியானது உவர் நீரில் ஊரினாலும் பாதிப்படையாது. கடலுக்குள் முழ்கினாலும் மூன்று மாதங்களுக்கு பழுதடையாமல் இருக்கும். ஆகாயத்தில் இருந்து விழுந்தாலும் உடையாமல் இருக்கும். இது எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருங்து சமிஞ்ஞைகளை அனுப்பியவாரே இருக்கும். வெளிப்புற உற்புறதாக்கத்மினாலும் சேதமடையாதவாறு பெட்டியும் தகவள் சேமிப்பு நாடாவும் பாதுகாப்பாக காணப்படுகின்றது. உலகிலேயே விமானத்தில் கருப்புபெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது அவூஸ்திரேலியாஆகும். இது 1960ஆம் ஆண்டில் இருது நடைமுறைக்கு வந்தது.