Dropping US Dollars by Helicopter சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கமில் பார்ட்டோஷெக் என்பர் செக் குடியரசு நாட்டில் டெலிவிசன் ஷோ நடத்தி வருகின்றார்.
டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின் “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அந்த புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால் போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும் பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார்.
இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அவர் சொன்னதுபோன்று சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் பணத்தை வீசி உள்ளார்.
மேலும் அங்கு வந்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Kidhours – Dropping US Dollars by Helicopter
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.