கங்காரு தனது குட்டிகளை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதை நாம் அதிகமாகவே அவதானித்திருப்போம். இதனை வெளிநாட்டில் வசிக்கும் தம்பதிகள் இதனை பின்பற்றுவதை நாமும் அவதானிக்கிறோம். நமக்கு பிறக்கும் குழந்தைகளை இவ்வாறு உடலுடன் உடல் ஒட்டும்படி அனைத்துக் கொள்வது இது ஒரு சிகிச்சை என்றும் இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் மருத்துவர்கள் கூறியுள்ள சில நன்மைகளை இங்கே காணலாம்.
ஏனெனில் இது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும், இன்குபேட்டர்களைச் சார்ந்திருந்த குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு குறைந்தது குழந்தைகளை 1 மணி நேரம் முதல் ஒரு நாள் முழுவதும் கூட கங்காருகளை போல் தூக்கி சுமக்கலாம். அம்மாக்கள் மட்டுமல்ல அப்பாக்கள் கூட குழந்தைகளை இவ்வாறு தூக்கி சுமக்கலாம் என்று கூறுகின்றனர்.
கங்காரு கவனிப்பு நன்மைகள்
- பிறந்த குழந்தைகளை நாம் இவ்வாறு கங்காரு முறையைப் போன்று இந்த சிகிச்சையைப் பயன்படுத்தினால் குழந்தைகள் இன்குபேட்டர் போன்ற தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கலாமாம்.
- குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போது அவர்களின் வெப்பநிலை கருப்பை வழியாக தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது குழந்தைகள் பிறந்ததும் பிரச்சினையாக இருக்குமாம்… இத்தருணத்தில் கங்காருகளைப் போன்று குழந்தைகளை தூக்கும் போது தங்களது வெப்பநிலையில் இருப்பது போன்று குழந்தைகள் உணர்கின்றனராம்.
- மேலும் இந்த கங்காரு கவனிப்பைப் பெற்ற குழந்தைகள் 15 வயதில் சிறந்த மூளை வளர்ச்சியினை பெறுகின்றனராம். அதுமட்டுமின்றி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் சில பேருக்கு கங்காரு கவனிப்பும் சில குழந்தைகளை இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டு ஒப்பிட்டு பார்க்கும் போது கங்காரு கவனிப்பைப் பெற்ற குழந்தைகளின் மூளை வளர்ச்சிய சிறந்து இருந்தது. குழந்தைகள் அம்மாவிடம் கங்காரு பராமரிப்பில் இருக்கும் போது இதயத் துடிப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் தூக்கம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மூளை சிறப்பாக செயல்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- இவ்வாறான பராமரிப்பினை பெற்றால் குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பதாகவும், அதிகமான எனர்ஜியுடன் காணப்படுகின்றனராம்.
- புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இயல்பாகவே வாசனையை நுகரும் பண்பு இருக்கிறது, எனவே உங்கள் குழந்தையை கங்காரு போல் தூக்கும் போது அவர்களுக்கு தாய்ப்பால் பருக மிகவும் எளிமையாக இருக்குமாம்.
- இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தினை ஊக்குவிக்கும் இந்த பயிற்சியில், குழந்தைகளுக்கு சுவாசக் கருவி இல்லாமல் 48 மணி நேரத்திற்கு விடுவிக்கப்பட்டு கங்காரு பராமரிப்பு கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக மருத்துவர் கூறுகின்றார்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கம் இந்த கங்காரு பராமரிப்பு, குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியினை கொண்டிருப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று, உணவுப்பிரச்சினை இவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.
- குழந்தையும் தாயும் ஒன்றாக இருப்பதால் தாய்ப்பால் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் அதிக அளவில் பால் உற்பத்தி செய்ய உதவுகின்றன.
- குறைந்த அழுத்தம் இருக்கும் போது நிம்மதியாக குழந்தைகள் உறங்குவார்கள். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இன்குபேட்டர்களில் தூங்கும் போது சற்று விழித்து எழுந்தனர். ஆனால் கங்காரு பராமரிப்பில் தூங்கிய குழந்தைகள் மன நிம்மதியுடன் ஆழமாகத் தூங்கினார்கள்.
- குழந்தைகள் அம்மாவின் கருப்பையில் இருக்கும் போதே அப்பாவின் குரலை அறிந்து இருப்பார்கள். எனவே குழந்தைகள் அப்பாக்களிடமும் கங்காரு பராமரிப்பில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
- குழந்தைகள் பிறந்து குறைந்து 2 மணி நேரம் கழித்து நீங்கள் கங்காரு பராமரிப்பை தொடரலாம். எப்போது உங்கள் குழந்தை உங்கள் மார்பை விட்டு விலக நினைக்கிறார்களோ அப்போது நீங்கள் அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள்.
- ஒரு அமைதியான மங்கலான லைட் அறையில் அமர்ந்து, குழந்தைக்கு டைப்பர் அணிந்தும் தாய் முடிந்தால் உங்கள் வெற்று மார்பில் குழந்தையை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும்.
- மேலும் தாய்ப்பால் கொடுத்தப் பிறகு குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்கலாம். இந்த கங்காரு பராமரிப்பில் நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் குழந்தைகளிடம் இருந்து உணரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.