Thirukkural 404 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / கல்லாமை
”கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.”
கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
—மு. வரதராசன்
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
—சாலமன் பாப்பையா
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 404
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.