Asteroid Psyche பொது அறிவு செய்திகள்
நாசா ‘சைக்’ சிறுகோளை ஆய்வு செய்யும் விண்கலத்தினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.
பால் வெளி மண்டலத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரத்தில் சிறுகோள்கள், விண்கற்கள் ஆகியவை அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன.
அங்கு அமைந்துள்ள சிறுகோள்களில் ஒன்றாக ‘சைக்’ விளங்குகிறது. முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களாலான அந்த சிறுகோளை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது.
அதன்படி ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்த சிறுகோளுக்கு விண்கலனை ஏவி உள்ளது. புளோரிடா மாகாணம் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.
Kidhours – Asteroid Psyche
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.