Nobel Prize in Medicine பொது அறிவு செய்திகள்
2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 2நபர்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுத்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளின் கீழ் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நியூக்ளியோசைடு மூலக்கூறுகள் மாற்றம் தொடர்பாக இவர்களின் கண்டுபிடிப்பு கொரோனா நோய்த் தொற்றின் போது, எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிக்கப்பட்ட காரணமாக அமைந்தது.
அதாவது, இந்த ஆர்என்ஏ தடுப்பூசி வழக்கமான தடுப்பூசி போல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கமால், உடலில் வைரஸ் புரதத்தை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை கொண்டவை. இதன் மூலம் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும் என்பதனை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனை கடந்த 2005 ஆம் ஆண்டே கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேன் கண்டு பிடித்து அறிவியல் கட்டுரை மூலம் வெளியிட்டனர்.
பெருந்தொற்று பிரச்னைக்கு தீர்வு காண எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசிகள், அறிவியல் பூர்வமாக சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது. இவற்றை குறைந்த செலவில் விரைவாக உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றின் போதே, இக்கண்டுபிடிப்பு பேரூதவியாக அமைந்தது. இந்நிலையில், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்கு காரணமாக அமைந்த விஞ்ஞானிகள் தற்போது நோபல் பரிசு மூலம் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு நோபல் பரிசு தொகை 8 கோடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Kidhours – Nobel Prize in Medicine, update Nobel Prize in Medicine
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.