Nobel Prize for Peace 2023 பொது அறிவு செய்திகள்
2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறையில் உள்ள நர்கேஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கெனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, ஈரானைச் சேர்ந்த நர்கேஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம், ஹிஜாப் முறையாக அணியாத குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட இளம்பெண், சிறையில் உயிரிழந்தார்.
இதனை கண்டித்து பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக நர்கேஸ் முகமதி என்ற பெண் போராளி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தார். அந்நாட்டு அரசால் 13 முறை கைது செய்யப்பட்ட நர்கேஸ் முகமதிக்கு 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள நர்கேஸ் முகமதிக்கு நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Nobel Prize for Peace 2023
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.