Nobel Prize for Chemistry பொது அறிவு செய்திகள்
2023 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு ( discovery and synthesis of quantum dots) தொடர்பான ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் நோபல் பரிசுக்கான அறிவிப்பு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு பருப்பொருளில் உள்ள எலக்ட்ரான் இயக்கவியல் தன்மை குறித்த ஆய்வு மேற்கொண்ட Pierre Agostini, Ferenc Krausz , Anne L’Huillier ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது. அதேப்போல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
நியூக்ளியோசைடு மூலக்கூறுகள் மாற்றம் தொடர்பாக இவர்களின் கண்டுபிடிப்பு கொரோனா நோய்த் தொற்றின் போது, எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிக்கப்பட்ட காரணமாக அமைந்தது.
Kidhours – Nobel Prize for Chemistry, Nobel Prize for Chemistry Update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.