Divorce Rate சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகிலேயே அதிக விவாகரத்தை பெறும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மிகக் குறைந்த சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்திருப்பது இந்திய நெட்டிசன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விவாகரத்து சதவீதம் 1% ஆக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம் உலகிலேயே விவாகரத்து குறைவாக பெறும் இரண்டாவது நாடாக இருக்கிறது.
இருப்பினும் இங்கு 100-இல் 7 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல் தெரிவிக்கின்றன.உலகிலேயே அதிக விவகாரத்தை பெறும் நாடாக ஐரோப்பா நாடான போர்ச்சுக்கல் மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் நாட்டில் விவாகரத்து சதவீதம் 85 ஆக உள்ளது.
இதேபோன்று பின்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்டவைகளிலும் விவாகரத்து ஆகும் சதவீதம் 50% யை தாண்டி உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 50 சதவீதம் பேர் விவாகரத்து செய்து கொள்வதாக தகவல் தெரிவிக்கிறது.
இவற்றையெல்லாம் ஒப்பிடும்போது இந்தியாவில் மிக மிக குறைந்த அளவுக்கே விவாகரத்து நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கு இந்திய சட்ட அமைப்புகளே முக்கிய காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Divorce rate:
🇮🇳India: 1%
🇻🇳Vietnam: 7%
🇹🇯Tajikistan: 10%
🇮🇷Iran: 14%
🇲🇽Mexico: 17%
🇪🇬Egypt: 17%
🇿🇦South Africa: 17%
🇧🇷Brazil: 21%
🇹🇷Turkey: 25%
🇨🇴Colombia: 30%
🇵🇱Poland: 33%
🇯🇵Japan: 35%
🇩🇪Germany: 38%
🇬🇧United Kingdom: 41%
🇳🇿New Zealand: 41%
🇦🇺Australia: 43%
🇨🇳China: 44%…
இந்துக்கள், புத்த மதத்தை பின்பற்றுவோர், ஜெயினர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர் இந்து மத சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து பெருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு விவாகரத்து பெற 1939இல் கொண்டு வரப்பட்ட சட்டம் உள்ளது. பார்சி இனத்தை சேர்ந்தவர்களுக்கு 1936 இல் கொண்டுவரப்பட்ட விவாகரத்துச் சட்டமும், கிறிஸ்தவர்களுக்கு 1869ல் கொண்டுவரப்பட்ட சட்டமும் விவாகரத்தை வழங்குகின்றன.
மற்ற பிரிவை சேர்ந்தவர்கள் 1954 இல் கொண்டுவரப்பட்ட சிறப்பு சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து பெறுகிறார்கள்.உலகிலேயே மிகக் குறைந்த அளவில் விவாகரத்து நடக்கும் நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Kidhours – Divorce Rate
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.