Eating Butter Guinness Record பொது அறிவு செய்திகள்
வெண்ணெய் என்றால் எல்லோருக்கும் பிடித்தமானது தான். ஆனாலும், தோராயமாக 200, 300 கிராம் அளவுக்கு கூடுதலாக யாரும் வெண்ணெய் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் அதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும்.
ஆனால், அரைக்கிலோ வெண்ணெயை வெறும் 1 நிமிடம் 2.34 நொடிகளில் சாப்பிட்டு முடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஒரு பெண். லியா என்ற பெண் முன்னெடுத்த இந்த சாதனை குறித்து கின்னஸ் சாதனை அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு டேபிளின் முன்னே லியா அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் வெண்ணெய் கட்டிகள் பெரியதாக வைக்கப்படுகின்றன.
![வெண்ணெய் சாப்பிட்டு கின்னஸ் சாதனை! Eating Butter Guinness Record 1 Eating Butter Guinness Record பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/09/Untitled-design_20230919_124235_0000.jpg)
போட்டிக்கான கவுண்டன் தொடங்கிய அடுத்த சில நொடிகளிலேயே ஒரு வெண்ணெய் கட்டியை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தார் லியா. இரண்டாவது வெண்ணெய் கட்டியை சாப்பிடும்போது இவ்வளவு வேகம் இல்லை.
Kidhours – Eating Butter Guinness Record
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.