Guinness Record Highest Dog பொது அறிவு செய்திகள்
கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ் (Zeus) புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. அதற்கு நாய் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எலும்பில் ஏற்பட்ட புற்று நோயால் ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் 3 அடி 4.18 இன்ச் உயரம் கொண்டதாக (1.046 மீட்டர்) இருந்தது.
இதன் மூலம் உலகிலேயே அதிக உயரம் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை ஜீயஸ் கடந்த 2022 மார்ச் மாதம் ஏற்படுத்தியிருந்தது. அப்போது, ஜீயஸ் குறித்து சர்வதேச அளவில் செய்திகள் வெளிவந்து பெயரும் புகழும் குவிந்தன. 3 வயது பெண் நாயான ஜீயஸ் மீது நெட்டிசன்களும் அதிக அன்பு செலுத்தினர். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் ஜீயஸிற்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜீயஸ் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் அதற்கு வலது காலை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு கூடுதல் செலவு ஆகும் என்பதால் அதன் உரிமையாளர்கள் பொது தளத்தில் உதவி கேட்டனர். 8 ஆயிரம் அமெரிக்க டாலர் தேவைப்பட்ட நிலையில் ஜீயஸிற்கு 12 ஆயிரம் டாலர் வரை கிடைத்துள்ளது.
Kidhours – Guinness Record Highest Dog
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.