Increase Dead Report சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆபிரிக்க நாடான மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் டாபிகாக்டே (Tafeghaghte) கிராமத்தைச் சேர்ந்த 200 பேரில் 90 பேர் உயிர்ழந்துள்ளதாக் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என இடிபாடுகளிலிருந்து வெளியே வந்தவர் ஒருவர் கூறிய்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் ஏதும் அங்குக் கிடையாது.உலக நாடுகள் வழங்கும் ஆதரவை மொரோக்கோ அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என உயிர் தப்பியவர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேசமயம் நிலநடுக்கத்தில் உயிரிழந்த தமது 3 மகன்களும் ஒன்றாக அணைத்துக்கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தந்தை அப்தூ ரஹ்மான் குறிப்பிட்டார்.நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர்கள் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் சொன்னார். மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் அட்லாஸ் மலைகளில் உள்ள பல கிராமங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை மொரோக்கோவை உலுக்கிய ஆக மோசமான நிலநடுக்கம் இது என்றும் கூறப்படுகிறது. மொராக்கோவின், மராக்கேஷ் பகுதியில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அட்லஸ் மலைத்தொடர் உள்ளது. இதனை ஒட்டிய நகரங்களில் நேற்றிரவு 11 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.
அந்நாட்டு புவியியல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி ரிக்டர் அளவில் 7 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது. பலரும் தூக்கத்தில் இருந்த போது கட்டடங்கள் குலுங்கின.இதில் ஏராளமான வீடுகள் நொடிப்பொழுதில் உடைந்து விழுந்தன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பலமுறை பின் அதிர்வுகளும் அங்கு உணரப்பட்டன. உயிரை காப்பாற்றிக் கொள்ள பலரும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
மொத்த பலி எண்ணிக்கை 2,012 ஐ தாண்டி உள்ளதாகவும் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Kidhours – Increase Dead Report
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.