Heavy Rain in Greece உலக காலநிலை செய்திகள்
கீரீஸ் நாட்டில் ‘டேனியல்’ சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1930-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிறகு தற்போது அங்கு மீண்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கிராமங்களில் குடியிருப்புகள் நீருக்குள் மூழ்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.