Tsunami Warnings உலக காலநிலை செய்திகள்
தெற்கு பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளுக்கு சுனாமி ஏற்படும் அபாயம் தற்போது கடந்துள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
எனினும், ஜப்பானின் சில பகுதிகளில் 3 மீற்றர் உயரத்தில் சுனாமி அலைகள் நிலத்தை வந்தடைந்ததாக தகவலறியப்பட்டுள்ளது.
எனினும், தற்போது சுனாமி அபாயம் மறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
பிலிப்பைன்ஸில் நேற்று (02.12.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.6 மெக்னிடியூட் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
இதனால், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.
Kidhours – Tsunami Warnings
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.