Bus Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஈராக் தலைநகர் பக்தாத்தில் சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குறித்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 14 ஈரானியர்களும், 2 ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் அடங்குவதாகவும் ஏனைய இருவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்! 18 பேர் பலி Bus Accident 1 Bus Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/09/Untitled-design-2023-09-03T225526.969.jpg)
மேலும், ஈரானின் கர்பலாவில் இடம்பெறவிருந்த மத நிகழ்வொன்றுக்காக பயணித்தவர்களே விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஈராக்கில் நாளாந்தம் வீதி விபத்து காரணமாக சராசரியாக 13 பேர் உயிரிழப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
Kidhours – Bus Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.