Herbivore Dinosaur சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் நாம் தெரிந்து கொள்ள முடியாத, ஆனால் தெரிந்து கொள்ள ஆசைப்படும், முயற்சிகள் மேற்கொள்ளும் எத்தனையோ ஆச்சரியங்கள் உள்ளன. இப்போது வரை டைனோசர்கள் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கின்றன. இதைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியக் துணைகண்டங்களில் உள்ள புதைப்படிவங்களை (fossils) தோண்டுவதன் மூலமாக, பூமியின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு பல ஆச்சரியமான விஷயங்கள் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் பாலைவனம் என்றாலே ராஜஸ்தானில் வெப்பம் வாட்டும் தார் பாலைவனம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மெசோசோயிக் காலத்தில் இப்போதைய தார் பாலைவனம் ஒரு டிராப்பிக்கல் கடற்கரையாக இருந்தது. டெதிஸ் என்ற பெருங்கடலின் ஒரு பகுதியாக, இந்தக் கடற்கரையில் பலவிதமான கடல் வாழ் உயிரினங்களும், டைனோசர்களும் ஆக்கிரமித்து வாழ்ந்துள்ள காலமாம்.
தார் பாலைவனம் பற்றிய சமீபத்திய ஆய்வில் டைனோசர் பற்றிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிக்ரேயோசொரிட்ஸ் என்ற தாவர உணவுகளை மட்டுமே சாப்பிட்ட மிக நீளமான கழுத்து கொண்ட டைனோசர் 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் புதைப்படிம கண்டுபிடிப்புகளில், இது தான் மிகவும் பழமையானது. அது மட்டுமல்ல, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனோசர் இனத்தில் இது தான் முதன்மையானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆய்வுக்குழுவில் முழுக்க முழுக்க இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். தார் பாலைவனத்தில் இந்த விவரங்கள் கண்டறியப்பட்டதால், அதனை நினைவுகூரும் விதமாக, இந்த டைனோசருக்கு தாரோசரஸ் இண்டிகஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஆய்வுக்குழுவினர் தங்களின் கண்டுபிடிப்பை சயிண்டிஃபிக் அறிக்கைகள் ஜர்னலில் விவரமாக எழுதியுள்ளனர். இதன் மூலம், பூமி உருவாகும் முன்பிருந்த வரலாற்றின் முக்கியத்துவமும், இந்திய துணைக்கண்டத்தில் புதைபடிவ ஆய்வுகள் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
டரோசரஸ் இண்டிகஸ் போன்ற டிக்ரேயோசொரிட்கள் வகையைச் சேர்ந்த டைனோசர்கள், மற்றொரு பெரிய குழுவாக அறியப்படும் டிப்ளோடோகாய்டு சாரோபாட்கள் என்ற இனத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. இந்த இன டைனோசர்களுக்கு உடல் மற்றும் கழுத்துப் பகுதி மிகவும் நீளமாக இருக்கும். மத்திய ஜூராசிக் காலம் முதல் ஆரம்ப கிரெட்டேசியஸ் காலம் வரை, அனைத்து புதைப்படிம லேயர்களில் இவை காணப்படுகின்றன.
ரூர்க்கியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிலையத்தின் பழங்கால ஆய்வாளரும், இந்த ஆய்வின் ஆசிரியருமான சுனில் பாஜ்பாய், டிக்ரேயோசொரிட்களுக்கு அதன் கழுத்தின் பின்புறத்தில் பகுதியில் ஸ்பைக்ஸ் என்று கூறப்படும் கூர்மையான நீட்டிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இவை, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இது போல புதைப்படிமங்கள் இருந்ததாக இது வரை பதிவானது இல்லை என்று தெரிவித்துள்ளார். டிப்ளோடோகாய்டுகள் என்ற வகை டைனோசர்களின் முன்னோடிகள் மட்டுமே இந்தியாவில் வாழ்ந்ததாக, முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், கோட்பாடுகளும் தெரிவிக்கின்றன.
Kidhours – Herbivore Dinosaur
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.