BRICS Association பொது அறிவு செய்திகள்
பிறிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் கடந்த 22-ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று நேற்றைய தினம் நிறைவடைந்தது.
இதில் புதிதாக இன்னும் 6 நாடுகளை இணைப்பதற்கு மாநாட்டில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
வளா்ந்து வரும் பொருளாதார சக்திகள் இணைந்து உருவாக்கிய முக்கிய பன்னாட்டு கூட்டமைப்பாக பிறிக்ஸ் கூட்டமைப்பு திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து ‘பிறிக்’ என்ற பெயரில் கூட்டமைப்பை ஆரம்பித்தது இதில் 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைந்ததை தொடர்ந்து ‘பிறிக்ஸ்’ என கூட்டமைப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், பிறிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது.
மாநாட்டில் நாடுகளிற்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்படும், அந்த வகையில் இந்தக் கூட்டமைப்பின் சாா்பாக உருவாக்கப்பட்ட “New Development வங்கியின் மூலமாக” பல்வேறு நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவது ஓர் சிறப்பான விடயமாகும்
இந்நிலையில் பிறிக்ஸ் கூட்டமைப்பில் புதிய உறுப்பினா்களை இணைப்பது தொடா்பாக மாநாட்டில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
அனைவரினதும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துக் கொள்ள இந்தியா ஆதரவளிக்கும் எனவும் இந்த வேளையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா்.
இதன்படி பிறிக்ஸ் கூட்டமைப்பில் 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக சேர்த்துக் கொள்ள மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 06 நாடுகளும் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணையவுள்ளன.
எதிர்வரும் ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1-ஆம் திகதி முதல் இந்த 06 நாடுகளும் பிறிக்ஸ் கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளது.
Kidhours – BRICS Association
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.