Monday, February 10, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புநிலவில் இதுவரை கால் பதித்துள்ள நாடுகள் பற்றி தெரியுமா? Space Traveling Countries

நிலவில் இதுவரை கால் பதித்துள்ள நாடுகள் பற்றி தெரியுமா? Space Traveling Countries

- Advertisement -

Space Traveling Countries  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான்.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியவை. மீதமுள்ள பனிரெண்டும் ஆளில்லாக் கலங்கள். 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு லூனா 9 ஆய்வுக் கலத்தை soft land செய்து வரலாறு படைத்தது ரஷ்யா.

- Advertisement -

நிலவில் மென்மையாக தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் படைத்தது ரஷ்யா. ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு ஜூலையில் அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் மூலம் நிலவில் மனிதனை கால்பதிக்க வைத்தது அமெரிக்கா. வரலாற்று பதிவின் படி அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்ற நிமிடங்கள் சாதனை நொடிகள். அப்போது தொடங்கி 1972ஆம் ஆண்டு வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பி 12 பேரை நிலவில் கால் பதிக்க வைத்துள்ளது அமெரிக்கா.

- Advertisement -
Space Traveling Countries  பொது அறிவு செய்திகள்
Space Traveling Countries  பொது அறிவு செய்திகள்Space Traveling Countries  பொது அறிவு செய்திகள்

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி நிலவில் கடைசியாக கால்பதித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் கோர்னென்.முன்னாள் சோவியத் யூனியன் தான் முதன் முதலில் விண்கலத்தை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்ததுடன், அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்கள் மூலம் நிலவின் தரையில் இருந்து முதல் புகைப்படங்களையும் எடுத்தது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா சர்வேயர் என்ற திட்டத்தில் 5 ஆளில்லாக் விண் கலங்களையும், அப்போலோ என்ற திட்டத்தின் வழியாக மனிதர்களைக் கொண்ட ஆறு விண்கலங்களையும் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.

அமெரிக்கா நிலாவில் ஆட்களைத் தரை இறக்கிய பின்னர், சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லா விண்கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்து வரச் செய்தது. ஜப்பானும் நிலவு குறித்து தனது ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் Chang’e 1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

நிலவின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “யுடு”ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய 3-வது நாடானது சீனா. மொத்தமாக, சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. 2030ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

ஆக இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் தான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகள். ஆனால், மர்மங்கள் நிரம்பிய நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்த நாடும் வெற்றிகரமாக தரையிறங்கவில்லை. அந்த வரலாற்று சாதனையை செய்து முடிப்பதற்காகத்தான் சந்திரயான்-3 தயாராக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் லூனா-25 வெற்றிகரமாக நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் இந்தியாவிற்கு முன்பாக தென்துருவ தரையிறக்க சாதனை ரஷ்யாவிற்கு சொந்தமாகிவிடுமோ என உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் ரஷ்யாவின் முயற்சி பலனளிக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணாமாக லூனா-25 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவில்லை. அந்த மகத்தான சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து முடிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே நிலவில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. எனவே, இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே இந்த மகத்தான சாதனையை காண ஆவலோடு காத்திருக்கிறது.

 

Kidhours – Space Traveling Countries

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.