The wrestler passed away சிறுவர்களுக்கான உலக செய்திகள்
WWE மல்யுத்த வீரர் பிரே வியாட் என்றும் அழைக்கப்படும் விண்டம் ரோட்டுண்டா, நேற்றையதினம் (24-08-2023) வியாழன் அன்று தனது 36வது வயதில் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
WWE மல்யுத்த போட்டிகளில் ப்ரே வியாட் 2009 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ப்ரே வியாட் உயிரிழந்ததை, பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், புகழ்பெற்ற WWE வீரர் ப்ரே வியாட்டின் தந்தை, எங்கள் WWE உறுப்பினர் ப்ரே வியாட் நெஞ்சுவலியால் நேற்று அதிகாலை உயிரிழந்தார் என்ற சோக செய்தியை எங்களுக்கு அவர் தெரிவித்தார்.
அவரது குடும்பத்திற்காக நாங்கள் பிராத்தனை செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, அவரது மறைவிற்கு WWE அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளது.
Kidhours – The wrestler passed away
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.