Friday, November 22, 2024
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணம் Alternanthera Sessilis

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணம் Alternanthera Sessilis

- Advertisement -

Alternanthera Sessilis    பொன்னாங்கண்ணி கீரை

- Advertisement -

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது. கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை, கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்றார்கள் சித்தர்கள்.அதற்கு ஏற்ப பல உன்னதமான கீரை வகைகள் நம் மண்ணில் விளைகின்றன.

அதில் பொன்னாங்கண்ணி கீரை மகத்துவம் நிறைந்தது. இந்த கீரை மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால் தான் அதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள். பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி.

- Advertisement -

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக்குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டுப் பொன்னாங்கண்ணியில் தான் பலவித சத்துகள் நிறைந்துள்ளன.

- Advertisement -

பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது. பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்பார்கள். அந்த அளவுக்கு கண் ணொளிக் கொடுக்கும் சத்துக்கள் அதில் உள்ளன. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந் தால் கண்ணாடி அணிய வேண்டிய தேவையே இருக்காது

காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல் கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால் என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப் பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று. என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான். பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகத் தயாரித்தும் பயன்படுத்தலாம்.

Alternanthera Sessilis    பொன்னாங்கண்ணி கீரை
Alternanthera Sessilis    பொன்னாங்கண்ணி கீரை

அதாவது கீரையின் சாறுஎடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகுப்பதம் வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண் புகைச்சல், உடல் சூடு ஆகிய பிரச்சினைகள் சரியாகும்.

புத்துணர்வும் கிடைக்கும். கண் பார்வையும் தெளிவாகும். உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.